பூச்சிகொல்லி மேலாண்மை சட்ட வரைவு 2025: மாநில உரிமைகளை பறிக்கும் இந்திய அரசு

விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிகொல்லிகளை நெறிப்படுத்தும் சட்ட வரைவை அரசியல் கட்சிகள் மற்றும், மக்கள் கருத்துக்காக ஒன்றிய விவசாய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 


இதில் மாநிலங்களுக்கான விவசாய உரிமையை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. மாநிலங்களின் விவசாயம் சார்ந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை இந்தியா அரசு இதன் வழியே பிடுங்கி கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பூச்சிகொல்லிகளை விற்பனைக்கு பதிவு செய்யும் அதிகாரம் முழுமையும் ஒன்றிய அரசின் கீழ் உள்ளது. மாநிலங்களுக்கு இதில் எந்த உரிமையும் இல்லை. மேலும், ஒரு கூறிப்பிட்ட பூச்சி கொள்ளியை ஒரு மாநிலத்தில் தடை செய்ய ஒன்றிய அரசால் மட்டுமே முடியும். உதரணமாக, 2017 மகராஸ்ராவில் 

மோனே-குடோட்டாபஸ் பூச்சி கொல்லியால் பல நூறு பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் பூச்சிகொல்லியால் மாண்டும் உள்ளனர். எனினும் மாநில அரசின் பேச்சை கேட்காமல் ஒன்றிய அரசு அந்த பூச்சிகொல்லியை இன்றும் விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறது.


இன்றைய நிலையில் மாநில அரசு தன் மாநிலத்தில், ஒரு பூச்சிகொல்லியை முழுமையாக தடை செய்யும் அதிகாரம் இல்லை. அதிக பட்சமாக 90 நாட்கள் வரை மட்டுமே ஒரு பூச்சிகொல்லியை மாநில அரசால் தடை செய்ய முடியும். பூச்சிகொல்லி விற்பனை சார்ந்தும் ஒன்றிய அரசு எந்த அதிகாரத்தையும் மாநிலங்களுக்கு வழங்கவில்லை.


இந்திய அரசியலமைப்பின் 7 அட்டவணையில்(seventh schedule) பட்டியல் 2 இல்(entry 14) விவசாய சேர்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பை மதிக்காமல், மாநில பட்டியலில் உள்ள பூச்சிகொல்லிகளில் ஒன்றிய அரசு சட்ட இயற் முயற்சிப்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரான ஒன்றிய பாஜக அரசின் முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.


இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பல நூறு பூச்சிகொல்லிகள் பல மேற்குலக நாடுகளில் தடை செய்துள்ளனர். காரணம், இவை உணவை நஞ்சாக்கி மனித உடலில் கேன்சர் உள்ளிட பல நோய்கள் வர காரணமாகவும் உள்ளது. எனினும் அவற்றின் விற்பனை இந்தியாவில் சிறப்பாக நடத்து கொண்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகளையும் உணவு உண்ணும் அனைவரையும் ஒன்றிய பாஜக அரசு கைவிட்டுள்ளது. இதன் மூலம் பண்ணாட்டு வணிக நிறுவனங்களின் கையில் இந்திய மக்களையும் விவசாயிகளையும் ஒன்றிய பாஜக அரசு ஒப்படைத்துள்ளது.


இந்த கட்டுரையை எழுதியவர் கார்த்திக். கடந்த 8 வருடங்களாக கொழுமம் கிராமத்தின் உள்ளூர் மரபு நெல் ரகங்களை பாதுகாத்து வருகிறார்.


Comments

Popular posts from this blog

Importance of Traditional Farming in addressing India's Agrarian & Food Crisis

India's Digital Rupee: Central Banks' push towards Surveillance State

HPV Vaccine: Un-safe and In-effective, Explained