டாக்டர்.ரிச்சாரியா உள்ளூர் அரிசி விதை பாதுகாப்பு மய்யம், 2024
2023 உலகில் உள்ள 125 நாடுகளில் மக்கள் பசி நிலமையை பற்றி அறிய, உலக புகழ் பெற்ற ஆய்வு ஒன்று நடந்தது. இதில், இந்தியா 111 இடம் பிடித்துள்ளது. அப்பிரிக்காவை விட இந்தியாவில் பசி மோசமாக நிலவுவதாக இந்த ஆய்வு நிறுவியுள்ளது. இந்தியாவில் ஊட்டசத்து குறைபாடு தலைவரித்து அடுவதாகவும் கூறியுள்ளது. இன்றைய இரசாயணம் கலகப்பட்ட உணவில் மனித உடலுக்கு தேவையான எந்த ஊட்டசத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இதனால், மனிதன் உடல் மற்றும் மூளை தன் முழு ஆற்றலை அடைய முடியாமல் பாதிக்கப்படுகிறது. இது பல்வேறு நேய்களுக்கு வழி வகுக்கிறது எனவும் இந்த ஆய்வு கூறுகிறது. மேலும், இந்தியாவில் 2 இல் 1 குழந்தைக்கு, மூளை வளர்ச்சி குன்றியுள்ள உண்மையை தெளிவாய் குறிப்பிட்டுள்ளது. இந்த விதாமான நவீன பசிக்கும் நமது உணவும் அதில் கலக்கப்பட நஞ்சுமே காரணம்.
இன்றைய நவீன வேளாண்மையில் பயன்படுத்தபடும் அதிக மகசுல் தரும், ஒட்டு ரக விதைகளிலlல் மனித உடலுக்கு தேவையான எந்த ஊட்டசத்துகள் இல்லை என்பது அறிவியல் உண்மையாகி இருக்கிறது.
உணவு உற்பத்தியில் கலக்கப்படும் ராசாயனங்களும் நஞ்சுகள், குழந்தைகளுக்கு கடுமையான மூளை மற்றும் நரம்பு மண்டல பாதிப்பை எற்படுத்தி இருக்கிறது எனவும் ஆய்வுகள் கூறுகின்றனர். இன்று பெரியவர்களிடம் கணப்படும் உயர் ரத்த அழுத்தம், சக்கரை நேய், புற்றுநேய், பக்கவாதம் என இன்றைய பல நேய்களுக்கு, நமது உணவில் கலக்கப்பட்ட நஞ்சே காரணமாக உள்ளது.
நோய்நாடி நோய் முதல் நாடி அதுதனிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
- குறள்
நமது குழந்தைகளுக்கு நாமே நஞ்சை ஊட்டும் அவலதில், மக்களை, இந்த அரசுகளும் போலி விஞ்ஞானிகளும் விவசாய நிபுணர்களும் தள்ளியுள்ளனர் என்பது இன்றியமையாத ஒரு உண்மை.
விவசாயத்தின் இன்றைய நிலை:
5 ஏக்கருக்கும் குறைவாய் நிலத்தில் விவசாயம் செய்பவர்களை சிறு விவசாயிகள் எனப் பிரித்துள்ளனர். இந்தியாவில் உள்ள மொத்த விவசாயிகளுள் 85% அதிகமான விவசாயிகள் சிறு விவசாயிகளே.
எனினும், இந்தியாவின் 50% அதிகமான மக்களைக்கு வேலை வாய்பு வழங்கும் இடமாக இந்த சிறு விவசாயிகளின் விவசாயம் உள்ளனர். இதனாலேயே மகாத்மா காந்தி விவசாயிகளை இந்தியாவின் முதுகெலும்பு என்று கூறிப்பிடுகிறார்.
அதனாலேயே, காந்திய பொருளாதார நிபுனர் குமரப்பா இந்தியால மக்களுக்காக உற்பத்திக்காக நடக்குனுமே தவிர, உற்பத்திகாக கருவிகளாக மக்கள் இருக்க கூடாது'னு சொல்லுறார்.
India doesn't need mass production. India needs production for masses.
-J.C.Kumarappa, Gandhian Economist.
ஆனால், இத்துனை முக்கியமான சிறு விவசாயிகள், போதுமான வருமானம் இல்லாததால் விவசாயத்தை விட்டு இன்று வேகமாய் வெளியேறி கொண்டு இருக்கின்றனர். மேலும், அதைனை நம்பியுள்ள நிலமில்லா விவசாய கூலி தொழிலாளிகளும் நகரங்களை நோக்கி வேலைக்காக அகதிகளாய் சென்று சேர்கின்றனர்.
உலகில் வாழ தகுதியற்ற சுற்றுசூழல் உள்ள முதல் 50 நகரங்களை வெளியிட்டது ஒரு ஆய்வு அமைப்பு. இந்த 50 நகரங்களில் இந்தியாவில் 42 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. சுத்தாமான காற்றும் நஞ்சில்லா நீறும் உணவும் இன்று நகரங்களில் குதிரை கோம்பு ஆகி வருகிறது.
தொடர்சியாக அரசுகளின் பொய் வாக்குதிகளும் நம்பிக்கை துரோகளுமே இந்த நிலைமக்கு காரணம்.
இந்திய அரசு, 1960களில் பசுமை புரட்சி என்ற பெயரில் ராசயான செயற்கை உரங்களும், ராசயான பூச்சி கொள்ளிகளையும் ஒட்டு ரக விதைகளையும் விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தனர்.
விவசாயிகளை மூளை சலவை செய்து, அதிக மகசூல் எடுக்கலாம். அதிக மகசூல் எடுத்தால், அதிக லாபம் பெறலாம் என்று இந்திய அரசு பிரச்சாரம் செய்தது.
இதனை நம்பிய விவசாயிகள், 50 ஆண்டுகளுக்கு பின், கடுமையான கடன் சுமைக்குள் தள்ளபட்டுள்ளனர். பல லட்ச விவசாயிகள் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டனர். இன்றும், இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு, ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார் என்று இந்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. இதை பற்றி பேச கூட ஆள் இல்லாத அவல நிலையில் இந்தியா உள்ளது.
"இறந்த விவசாயிகளுக்கு யார் நியாயம் வழங்குவது?" என்ற கேள்விக்கு மெத்த படித்த விஞ்ஞானிகளிடமும் விவசாய நிபுணர்களிடமும் பதில் இல்லை. நியாம் இல்லாத இடம் தீர்வு எவ்வாறு பிறக்கும்?
இதை பற்றி விஞ்ஞானிகளும், விவசாய நிபுணர்களும், ஊடகங்களும், பேசி வைத்தாற் போல், மௌனம் காப்பது, இன்றைய மக்கள் விரோத கட்டமைப்பை பற்றி நம்முன் எடுத்துக்காட்டுகிறது.
இந்நிலை நமக்கு, எது அறிவு? யார் நிபுணர்? என்ற கேள்விகளை ஆழமாக எழுப்புகிறது.
இந்நிலை, இந்தியா மக்களின் உணவு பாதுகாப்பு பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.
தீர்வு: டாக்டர்.ரிச்சாரியா உள்ளூர் அரிசி விதை பாதுகாப்பு மய்யம்
இன்று நாம் உண்ணும் அரிசி ரகங்கள் அனைத்துமே ஒட்டு ரக நெல். ஆதாவுது, Hybrid varities. இவை அனைத்திலும் ஊட்டசத்து குறைவாய் இருக்கும். ஆனால் அதிக விளைச்சல் தரும் ரகங்கள்.
வெள்ளையர்கள் இந்தியவை விட்டு வெளியேரும் போது, இந்தியா விவசாயிகளிடம் 2 லட்சததிற்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாக விவாசய விஞ்ஞானி டாக்டர்.ரிச்சாரிய கூறிப்பிடுகிறார். ஆனால், அவற்றுள் இன்று 2 ஆயிரத்திற்கும் குறைவான நெல் பாரம்பரிய ரகங்களே விவசாயிகளிடம் உள்ளன. மற்ற 1,97,000 நெல் ரகங்களின் விதை முற்றிலும் அழிந்துவிட்டது.
நாம் சில ஆய்வுகள் செய்து பார்த்ததில், திட்ட திட்ட அனைத்து பாரம்பரிய நெல் ரகங்களிலுமே வியப்பூட்டும் வெவ்வேறு மருத்துவ குணங்களும் மனித உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்களும் உள்ளது என தெரிய வந்துள்ளது. பாரம்பரிய அரிசிகளை கைவிட்டுவிட்டு ஒட்டு ரக அரிசியை நாம் உண்ண பழகியதே இந்தியாவில் இன்று காணப்படும் சக்கரை நேய் உள்ளிடவைகளுக்கு காரணமாக உள்ளது. உலகின் சக்கரை நோயின் தலைநகரமாக இன்று இந்தியா திகழ்கிறது
இதுவும் நவீன வேளாண்மையின் ஒரு மகத்தான சாதனை.
விவசாயிகள் தங்கள் சொத்தாக பாதுகாத்து வந்த பாரம்பரிய விதைகளை, அடுத்த அடுத்த தலைமுறைக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கைமாற்றியுள்ளனர். ஆனால், அவை அனைத்தையும், கடந்த 70 தே ஆண்டுகளில் அழித்ததை தான் இன்று வளர்ச்சி என்று நாம் பொருமை பேசிக் கொண்டிருக்கிறோம்.
இந்த பாரம்பரிய மரபு விதைகள் அனைத்தும் பண்நாட்டு நிறுவனங்களிடம் இருப்பு உள்ளது. டாக்டர் ரிச்சாரியா 19,000 பாரம்பரிய நெல் ரகங்களை இந்திய விவசாய பல்கலைக்கழகத்தில் சேமித்து வைத்திருந்தார். இவை அனைத்தையும் இந்திய அரசு, பண்நாட்டு நிறுவனங்களிடம்(Multinational Corporation) எடுத்து ஒப்படைத்துவிட்டது.
ஆனால், இன்று விதை பாதுகவலர்களிடம் இருக்கும் சில ஆயிரம் விதைகளும் அழிவின் தருவாயில் தான் உள்ளது. இவையும் அழிந்துவிட்டால், நாம் உணவை பண்ணாட்டு நிறுவனங்கள் தீர்மானிப்பனர்.இதன் காரணமாகவே உலக பணக்காரன் பீல் கேட்ஸ்(Bill gates);விவசாயிகள் நிலங்களை பறித்து விவசாயம் செய்து வருகிறார். இன்று உலகில் மிக பெரிய விவசாயி பீல் கேட்ஸ். உலகில் அதிக விவசாய நிலங்களை வைத்திருப்பவர் பில் கேட்ஸ்.
2002 மரபணு மாற்றப்பட்ட பருத்தி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று 99% இந்திய பருத்திகள் அனைத்துமே மரபணுமற்றப்பட்டது தான். இந்த விதையை பண்ணாட்டு கம்பேனிகளிடம் மட்டுமே வாங்கமுடியும். This is called Seed Monopoly. When you control the seed, you control the life in the planet. உணவு விதையிலிருந்து வருகிறது. விதையை ஒரு பண்நாட்டு நிறுவனத்தால் கட்டுபடுத்த முடியுமானல் இந்த உலகின் உயிர்களையும் கட்டுபடுத்த முடியும்.
2002இல் ஒரு கிலோ பருத்தி விதை ரூ.5 . இன்று அதன் விலைஒரு கிலோ ரூ.5000 என்று விற்பனை ஆகிறது. இந்தியாவில் நடந்த விவசாயிகள் தற்கொலைக்கு மரபணு மாற்றப்பட்ட பருத்தி விவசாயிகளே அதிகம்.
இந்த பிரச்சினைகளுக்கான தீர்வே எங்கள் முயற்சி. மக்களுக்கு ஊட்டசத்தான நஞ்சு இல்லா உணவு வழங்க வேண்டும், சிறு விவசாயிகளில் செழிப்பான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும், பாரம்பரிய விதைகளை வணிக வேட்டையிலிருந்து காப்பற்ற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.
இதன் இலக்குகளை சாத்தியமாக்கும் மாதிரி பண்ணை அமைக்கும் பணியில் கடந்த 6 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேம்.
இந்த முயற்சிகளின் விளைவே இந்த அரிசி.
கொழுமம் பகுதியில் அமராவதி ஆற்று படுகையின் பாரம்பரிய பயிர் செய்த மரபு நெல் ரகங்கள்: தங்க சம்பா, சிறுமணி சம்பா, மணல்வாரி, கார்த்திகை சம்பா, கருங்குறுவை, நெல்லூர் சம்பா ஆகியன.இவற்றுள் பல சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றுள் மணல்வாரி, தங்க சம்பா, சிறுமணி சம்பா ஆகிய 3 மரபு ரகங்களை மீட்டு, இயற்கை முறையில் பயிரிட்டு, பாரம்பரிய கைக்குத்தல் முறையில் அரிசியை தயார் செய்துள்ளோம்.
மணல்வாரி நெல் முள்களை உடையது. தெடுவோரை சில நேரம் காயப்படுத்தியும் விடும். மணல்வாரி கொமரலிங்கம் சாமரயாபட்டி பகுதிகளில் 1950 கள் வரை பயிரிடப்பட்டடு வந்துள்ளது. பின், நவீன வேளாண்மையின் தாக்காத்தால் அது கைவிடப்பட்டது. பின்னர், 2021 ஆம் ஆண்டு நாங்கள் இதன் விதைகளை மீட்டேடுத்து, மீண்டும் நமது பண்ணையில் பயிர் செய்துள்ளேம். இது சிவப்பு அரிசி. மோட்ட அரிசி. சாதத்திற்கு சுவையான அரிசி. இந்த அரிசிக்கு என்று ஒரு தனிச் சுவை உடையது.
தங்க சம்பா விளைச்சலின் போது தங்கத்தை போல் மிண்ணும் தன்மை உடையது. ஆதனால் இந்த நெல்லுக்கு இப்பெயர் வந்துள்ளது. சாப்பாட்டிற்கு ஏற்ற ரகம். தயிர் சாதத்திற்கு மிகவும் சுவையான ரகம்.
சிறுமணி சம்பா செங்கல்பட்டு சிறுமணி எனவும் அழைக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகம் விளைவிக்கபடுவதால் இதற்கு இந்த பெயர். மணி சம்பா என்னும் மரபு நெல் ரகம் பள்ளூ இலக்கியங்களில் காணப்படும் ரகம். இந்த மணி சம்பாவை போல் சிறியதாக உள்ளதால் இந்த ரகத்திற்கு சிறுமணி என்று பெயர் வந்துள்ளது. இதனை சிறுமணியன் என்று இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. இட்லி செய்ய மிகவும் ஏற்ற ரகம் .
பள்ளூ என்பது தமிழ் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. வெள்ளையர்கள் தமிழ்நாட்டுக்கு வறுவதற்கு முன் எழுதப்பட்டது. இது வேளாண் குடிகளான பள்ளர்களின் வாழ்க்கையை பற்றியும், தமிழ் நாட்டின் வேளாண்மை பற்றியும் பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
நுகர்வோர் விழிப்புணர்வு:
வெள்ளையாய் பழபழ வென்று இருக்கும் அனைத்தும் நல்லவை என்று தவறான புரிதல் மக்களிடம் உள்ளது. இதனால், வணிக லாபத்தை மட்டும் இலக்காக வைத்திருக்கும் கடைகளில் நாம் வாங்கும் அரிசி, பட்டை தீட்டப்பட்டு, அரிசியின் சாத்தான வெளி பாகம் முழுவதும் தவுடு ஆக நீக்கவிடுகிறார்கள். மேலும், பள பள என வெண்மையாய் இருக்க நச்சு ரசயனங்கள் அரிசியின் மீது பூசபடுகிறது. இந்த அரிசிகளின் எந்த ஊட்டசத்தும் இருக்காது. ஆதனால், அதனை உணவு என்று கருதமுடியாது. ஊட்டசத்துகள் இருந்தால் தான் அதனை உணவு என்று கொள்ள முடியும்.
இன்று சந்தையில் கிடைக்கும் அரிசிகள் அனைத்திலும் பட்டை தீட்டிய பிறகு இருக்கும் தவிடை, மதிப்பு கூட்டி, Rice bran Oil என்று விற்கிறார்கள். இது ஊட்டசத்து மிகுந்தாய் விளம்பரம் செய்யபடுகிறது. Rice bran oil என்றால் அரிசி தவிட்டு எண்ணெய். விளம்பர என்னும் பொய்யை உண்மை என நம்பி வாழும் கூட்டம் இருக்கும் இடத்தில் இது சாத்தியம் ஆகிறது. சத்தான வெளிபுறம் நீக்கபட்ட அரிசிகளேயே நாம் என்று உண்ணுகிறோம்.
இயற்கை உணவுகளுகான சந்தை இருப்பதை கண்ட வணிக இயற்கை அங்கடிகள், வணிகர்கள், இடைதரகர்கள் குறைந்த விலைக்கு சந்தையிலிருந்து இருந்து தரமற்ற ரசயான பொருட்களை வாங்கி அதிக விலைக்கு 'இயற்கை உணவு' என்று பெயர் மாற்றம் செய்து விற்பனை செய்கின்றனர். இயற்கை உணவில் இன்று கலப்படமும் அதிகம் காணப்படுகின்றது. இயற்கை பாரம்பாரிய அரிசி என்ற பெயரில் சாயம் புசப்பட்ட வண்ண அரிசி இன்று சந்தையில் உல வருகிறது.
45 ரூபாய்க்கு கருப்பு கவுனி போல் இருக்கும் போலி அரிசி இன்று சென்னை சந்தைகளின் வாங்கமுடியும். இதனை, கருப்பு கவுனி என நம்பி 250 ரூபாய்க்கும் வாங்கும் நுகர்வோரையும் நாம் காண முடிகிறது. எனவே, இயற்கை உணவுகளை சந்தையின் வணிக வேட்டையிலிருந்து பாதுகாக்த்தால் மட்டுமே நுகர்வோருக்கு நஞ்சில்லா உணவு வழங்க முடியும்.
மேலும், வெள்ளை அரிசியிலும் இந்த கலப்படம் நடக்கிறது. இன்று சந்தையில் கிலோ 40 ஒட்டு ரக அரிசிகள் கிடைக்கும். இந்த ஒட்டு ரக அரிசிகளை பாரம்பரிய அரிசி எனக் கூறி விற்பனை செய்துவிடுகின்றனர்.
நமது உணவு இன்று நஞ்சு ஆனதிற்கு மிக முக்கியாமன காரணம் விவசாயம் என்னும் வாழ்வியலை வணிகமாய் மாற்றியது தான். அதிக லாபம் சம்பாரிக்கலாம் என விவசாயிகளின் ஆசையை தூண்டி, ரசாயண நஞ்சுகளுக்கு மண் அடிமையாக்கியதும் இந்த வணிக ஆசை தான். அதே வணிக ஆசை, இன்று இயற்கை பொருட்களின் தரத்தையும் பாதிக்கிறது.
எல்லாவற்றையும் பணமாக பார்கும் உலகமையமாக்கல் விரைவில்தோர்க்கும். தனி மனிதவிடுதை தற்சார்பிலிருந்து தொடங்கும்.
-கோ.நம்மாழ்வார்.
திட்ட திட்ட அனைத்து பாரம்பரிய நெல் ரகங்களுமே இந்த ஒட்டு ரக நெல் ரகங்களில் பாதி விளைச்சலையே தரும். இதுவே தான், பாரம்பரிய அரிசியின் விலை சந்தையில் இருக்கும் அரிசியை விட விலை அதிகமாய் இருக்கிறது.
ஆதலால், இடைத்தரகர்கள், வணிகர்களை தவிர்த்து, நுகர்வோரிடம் நேரடியாக வந்துள்ள இந்த அரிசி, இயற்கையில் விளைந்த நாஞ்சில்லா பாரம்பரிய அரிசி. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை உடையது.
இவை அனைத்தையும் உள்ளடக்கியே நங்கள் இந்த விலையை நிர்நயத்துள்ளளேம். இந்த முயற்சியில் உங்களையும் இணைக்க விரும்புகிறோம். இந்த அரிசியை வாங்கும் போது நீங்களும் இந்த முயற்சியில் பங்காளிகளாக மாறுகிறீர்கள் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த பொருளை நீங்கள் வாங்கியதன் மூலன் எங்கள் முயற்சிக்கு நீங்கள் உங்கள் ஆதரவை வழங்கியதாகவே நாங்கள் கருதுகிறோம்.
இந்த ஆண்டு 2024-2025 இல் 20 பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட உள்ளோம். உங்கள் நல் ஆதரவை இப்பணிக்கும் தருமாறு கேட்டுக்கொள்கிறேம். எங்கள் ஊர் கொழுமத்தின் உள்ளூர் ரகங்களை தேடும் பணியிலிரும் ஈடுபட்டுள்ளோம்.
நெல் உற்பத்தி செய்யபட்ட பண்ணைறின் விவரம்,
https://g.co/kgs/4zeEWdL
இப்படிக்கு,
செல்வ கார்த்திக்,
இயற்கை விரும்பி,
டாக்டர் ரிச்சாரியா உள்ளூர் அரிசி விதை பாதுகாப்பு மய்யம்.
இதை பற்றி மேலும் தெரிந்துகெள்ள, கீழே உள்ள எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்,
9092920303.

Comments
Post a Comment