கருப்பு கவுனி விதைகளில் 'கலப்படம்' செய்யும் தமிழக வேளாண்மை பல்கலைக்கழகம்
கருப்பு கவுனியின் அரிசியின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்துமே மனித உடலுக்கு தேவையான முக்கிய சத்துகள் நிறைந்துள்ளன என்பது அறிவியல் உண்மை.
ஆனால், இன்று நாம் உட்கொள்ளும் அனைத்து அரிசியுமே ஒட்டு ரக அரிசிகள்(Hybrid). இவை அதிக விளைச்சலுக்காக செயற்கையாக உருவாக்கப்பட்டவை. ஆனால், பாரம்பரிய நெல் ரகங்கள் என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டு பழைமையானது. இவை சூழலை தாங்கி வளரக்குடியவை. செயற்கை ரசயானங்கள், பாரம்பரிய நெல் ரகங்களுக்கு தேவை இல்லை. இன்று நாம் சந்திக்கும் சாக்ரை நேய், உட்டசத்து குறைபாடு உள்ளிட்ட நோய்களுக்கு இந்த, ஒட்டு ரக விதைகளின் பங்கு மிக அதிகம்.
இப்படி இருக்க, தமிழக வேளாண்மை பல்கலைக்கழகம், சமிபத்தில் கருப்பு கவுனி(hybrid) ஒட்டு ரக விதைகளை அறிமுகப்படுத்தியுள்ளது(கோ-57). கருப்பு கவுனியின் சிறப்பை மக்கள் அறிந்துள்ளதால், சந்தையில் அதன் விலை இன்று பிரகாசமாய் உள்ளது. ஆனால், எது உண்மையான பாரம்பரிய நாட்டு கருப்பு கவுனி என்று இன்று சொல்லமுடியாத நிலை உள்ளது.
நாம் அறிந்த மருத்துவ குணமுள்ள கருப்பு கவுனி நாட்டு ரக நெல். ஆனால், இந்த ஒட்டு ரக கருப்பு கவுனியில் இவ்வளவு நோய் குணப்படுத்தும் தன்மை இருப்பதாக தெரியவில்லை. எனினும் இன்று விவசாயிகளுக்கே தெரியாமல் கருப்பு கவுனியின் விதை மாற்றப்பட்டுள்ளது. கலப்படம் செய்யபட்டுள்ளது. நுகர்வோருக்கும் இது பெரிதாய் தெரிய வாய்ப்பு இல்லை. இந்த செயல் நாட்டு கருப்பு கவுனி விதைகளை அழிக்கும் முயற்சி என்றே பாரம்பரிய நெல் விதை பாதுகாப்பாளர்கள் கூறுகின்றனர். தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இந்த முடிவு அறிவியலுக்கு எதிரான மக்கள் விரோத முடிவாக பார்கப்படுகிறது.
இந்த கட்டுரையின் எழுத்தாளர் கார்த்திஃ , கடந்த ஆறு வருடங்களாக பாரம்பரிய விதை நெல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளார்.

Comments
Post a Comment